Home வவுனியா செய்திகள் வவுனியாவில் காதலன் துக்கில் காதலி வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவில் காதலன் துக்கில் காதலி வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா செய்திகள்:வவுனியாவில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் காதலி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரின் சடலம் செட்டிக்குளத்திலுள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று மதியம் ஒரு மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்தில் 24 வயதுடைய கிருஸ்ணபிள்ளை தினேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

காதலன் உயிரிழந்த தகவலையறிந்த காதலி நேற்று மாலை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த நிலையில் அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவங்கள் தொடர்பில் செட்டிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.