Home மருத்துவம் நிங்கள் இரவில் தூங்கும்போது இதை மட்டும் செய்யதிங்க…

நிங்கள் இரவில் தூங்கும்போது இதை மட்டும் செய்யதிங்க…

மருத்துவ தகவல்:தூக்கம் என்பது ஊட்டச்சத்து நிறைந்த உணவு, உடற்பயிற்சி போன்று உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது என்பது நனகறிந்ததே. சிறந்த தூக்கம் ஒருவரது மூளை வளர்ச்சிக்கு உதவுவதுடன், அவர்கள் வயதடைவதை பிற்போடுகிறது.

பெரியவர்கள் கண்டிப்பாக தினமும் எட்டு மணி நேரமாவது தூங்குவது அவசியமானது.
ஆனால் தூக்கத்தை பாதிக்கும் காரணிகளால் உடல் மற்றும் உள ஆரோக்கியம் பாதிப்பதுடன், அவர்களின் அன்றாட செயற்பாடுகளிலும் பல மாற்றங்கள் இருப்பதை தெளிவாகப் பார்க்க முடியும்.

தூக்கத்தை கெடுக்கு காரணங்கள் என்ன எனபது உங்களுக்கு தெரியுமா?

1. நேரம் தாழ்த்தி இரவு சாப்பாடு எடுத்தல்.
இரவில் 9 மணிக்கு முன்பாக உணவுகளை உட்கொள்வது சிறப்பானது. நேரம் தவறுவதனால் தூக்கத்தில் பாதிப்பு ஏற்படும்.

2. சிட்டிக் அமிலம் உள்ள பழங்கள் இரவில் எடுத்தல்.
இரவு தூங்குவதற்கு முன்பு சிட்டிக் அமிலம் உள்ள பழங்களான திராட்சை, தோடம்பழம் போன்றவை உட்கொள்வதனால் நெஞ்செரிச்சல் ஏற்படுவதுடன் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது.

3. வெறு வயிற்றில் தூங்குதல்.
வெறு வயிற்றுடன் தூங்குவதனால் ஒழுங்கான தூக்கத்தைப் பெற முடியாது. எனவே தூங்குவதற்கு முன்பாக உணவை எடுத்துக் கொள்வது அவசியமானது.

4. கையடக்கத் தொலைபேசி பயன்படுத்தல்.
கையடக்கத் தொலைபேசி இல்லதவர்களை பார்க்க முடியாத நிலை உள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பம் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதுடன் ஹார்மோன்களின் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் தூக்கம் வெகுவாக பாதிக்கின்றது என்பதே உண்மை.

5. இரவில் உடற்பயிற்சி செய்தல்.
உடற்பயிற்சி என்பது சிறந்த தூக்கத்தை தரும் என்பது உண்மையாக இருந்தாலும் இரவில் உடற்பயிற்சி செய்வது தூக்கத்தைப் பாதிக்கவே செய்கிறது. எனவே காலை நேர உடற்பயிற்சியே வரவேற்கத்தக்கது.

6. வேலை நேரங்கள்.
இரவு நேர வேலை, பகல் நேர வேலை எப அடிக்கடி மாறி மாறி செய்பவர்களிற்கு ஆரோக்கியமானது தூக்கம் கிடைப்பது அரிதானதே.
படுக்கை அறையில் உள்ள தொல்லைகள்.

7. படுக்கையறையில் உள்ள தொல்லைகள்.
படுக்கையறையில் தொலைக் காட்சி, கணனி போன்றவை காணப்பட்டால் அவை தூக்கத்தை கெடுத்து விடுகிறது.

8. கால் நோய்கள்.
கால் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு இலகுவாக தூக்கம் வருவதில்லை என்பதே உண்மை.

9. குளிர்ந்த நீரினால் முகம் கழுவுதல்.
தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீரினால் முகம் கழுவினால் அது உடலை புத்துணர்ச்சி பெறச் செய்வதுடன் சக்தியையும் அளிக்கிறது. இதனால் தூக்கம் வருவதற்கு தாமதம் ஆகின்றது.

10. காபி குடித்தல்.
காபியில் உள்ள காஃபின் மூளையைத் தூண்டுவதனால் இரவில் காபி குடித்தலை தவிர்ப்பது சிறந்தது.