Home வவுனியா செய்திகள் வவுனியாவில் போயா தினத்தில் சாராயம் விற்றவர் சிக்கினார்

வவுனியாவில் போயா தினத்தில் சாராயம் விற்றவர் சிக்கினார்

வவுனியா செய்திகள்:போயா தினமான நேற்று வவுனியாவில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த நபர் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார்.

வவுனியா – மகாரம்பைகுளம் பகுதியிலுள்ள கடையொன்றில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மதுபான போத்தல்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரையும், கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.