Home சினிமா கோலமாவு கோகிலா படத்தின் வாசூலில் சாதனை எவ்வளவு தெரியுமா?

கோலமாவு கோகிலா படத்தின் வாசூலில் சாதனை எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமா:கோலமாவு கோகிலா’ திரைப்படம் இந்த வாரம் மட்டும் தமிழகத்தில் சுமார் ரூ.15 கோடி அளவுக்கு வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்தவாரம் வெளியாகிய திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் மட்டுமே ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் ரூ.15 கோடிகளுக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.