Home மருத்துவம் மஞ்சளும் தேனும் சேர்ந்து உண்டால் கிடைக்கும் நன்மைகள்

மஞ்சளும் தேனும் சேர்ந்து உண்டால் கிடைக்கும் நன்மைகள்

நம் வீட்டு சமையலறையில் உள்ள அதீத மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்ட ஓர் மசாலா பொருள் தான் மஞ்சள் தூள். நாம் இதுவரை மஞ்சள் பொடியை பாலுடன் சேர்த்து கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்த்துள்ளோம்.

இப்போது அந்த மஞ்சளை தேனுடன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணப் போகிறோம்.மஞ்சள் பொடியை, மிளகுத் தூள் மற்றும் தேனுடன் கலந்து சாப்பிட்டால், இன்னும் ஏராளமான உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இந்த கலவையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாத ஓர் அற்புத மருந்தும் கூட.