Home சர்வதேச செய்தி அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு பலர் பலி போக்குவரத்து தடை

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு பலர் பலி போக்குவரத்து தடை

சர்வதேச செய்திகள்:அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வீடியோ விளையாட்டு போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்ட பொழுதுபோக்கு வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பொழுதுபோக்கு வளாகம் ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதுவரை அதிகாரிகள் தரப்பு இதை உறுதி செய்யவில்லை. இருப்பினும் கொல்லப்பட்டவர்களின் எண்னிக்கை அதிகமிருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற Jacksonville Landing பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல வேண்டாம் என பொலிஸ் தரப்பு எச்சரித்துள்ளது.

இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டில் வேறு எவரேனும் ஈடுபட்டார்களா என்பது குறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.