Home வவுனியா செய்திகள் வவுனியாவில் 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியாவில் 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

வவுனியா செய்தி:வவுனியா – நெளுக்குளம், முள்ளிப்பிலவு சந்திப்பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞரிடமிருந்து இன்று காலை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரிடம் கஞ்சா இருப்பதாக வன்னி பிராந்திய போதையொழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த சிவகுமார் றெஜி எனும் 22 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞர் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிளில் இருந்து 100 கிராம் கேரளா கஞ்சா பொதியொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.