Home உள்ளூர் செய்தி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு விசேட நீதிமன்றம் அழைப்பு

உள்ளூர் செய்திகள்:முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.விசேட மேல் நீதிமன்றத்தால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி இவர்கள் அனைவரையும் விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள் மீது, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு எதிராக பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.