வவுனியா விடுதியில் பெண் கழுத்தை வெட்டி கொடூரமாக தற்கொலை

வவுனியா செய்திகள்:வவுனியா குழுமாட்டுச்சந்தி கணேசபுரத்தில் அமைந்துள்ள விடுதியொன்றில் வசித்து வந்த பெண்ணொருவர் கழுத்தை வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மேலும் இச்சம்பவம் விடுதியில் பெரும் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. தற்கொலைக்கு முயன்ற பெண்ணை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விடுதியில் வசித்து வந்த 18 வயதுடைய பெண் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

சிகிச்சைகளின் பின்னர் தற்போது வைத்தியசாலையின் விடுதி 2 இல் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த தற்கொலை பற்றிய மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.