Home யாழ் செய்தி யாழில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள சில முகாங்களை விடுவிக்க நடவடிக்கை

யாழில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள சில முகாங்களை விடுவிக்க நடவடிக்கை

யாழ் செய்திகள்:மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் , ஆனைக்கோட்டை கூழாமுறிப்பு இராணுவ முகாம் , உள்ளிட்ட சில பிரதேசங்கள் வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளதக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.

இது தொடர்புல் மாவட்டச் செயலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

குடாநாட்டில் பொதுமக்களின் பாவனைக்குரிய சில இடங்களை விடுவிக்குமாறு கோரியிரிந்தோம். அவ்வாறு கோரிக்கை விடப்பட்ட இடங்களில் 4 இடங்களை விடுவிக்க படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் வசாவிளான் மற்றும் குரும்பசிட்டிப் பகுதியில் உள்ள ஓர் கூட்டுறவுச் சங்க கிளைக் கட்டிடத்துடன் ஓர் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடமும் விடுவிக்கப்படவுள்ளது.

இதற்கான அறிவித்தல் யாழ்ப்பாணம் மாவட்ட கட்டளைத் தளபதியினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த கட்டிடங்கள் எம்மிடம். கையளிக்கப்பட்டதும் உடனடியாகவே உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். என்றார்.