Home வவுனியா செய்திகள் வவுனியாவில் மது­போ­தை­யில் வந்த இளை­ஞர் குழு தாக்குதல்

வவுனியாவில் மது­போ­தை­யில் வந்த இளை­ஞர் குழு தாக்குதல்

வவுனியா செய்திகள்:மது­போ­தை­யில்- இரும்­பு ­கம்­பி­க­ளு­டன் வீடொன்­றுக்­குள் புகுந்த மூன்­று­ பே­ரைக் கொண்ட இளை­ஞர் குழு ,வீட்­டின்­ வா­யிலை உடைத்து சேதப்­ப­டுத்­தி­ய­து­டன், வீட்­டின்­ மீது கற்­களை எறிந்­தும் தாக்­கு­தல் நடத்தினர்.

இந்தச் சம்பவம் வவு­னியா சாந்­த­சோ­லைப் பகு­தி­யில் நேற்று நடந்துள்ளது.

தாக்குதலில் குடும்­பத்­த­லை­வர் மற்­றும் கர்ப்பவதியாக அ­வ­ரது மனைவி, இரண்டு குழந்­தை­கள் உட்­பட ஐந்து பேர் செய்­வ­த­றி­யாது தவித்­த­து­டன், வீட்­டின் கதவை மூடி­விட்டு உள்­ளேயே இருந்­துள்­ள­னர்.

பின்­னர் பொலி­ஸா­ருக்குத் தகவல் தெரிவித்தனர். பொலி­ஸார் வரு­வ­தற்கு முன்­னரே குறித்த இளை­ஞர்­கள் தாக்­கு­த­லை­ மேற்­கொண்டு விட்டு உந்­து­ரு­ளி­யில் தப்­பிச் சென்­றுள்­ள­னர்.

கொடுக்­கல் வாங்­கல் பிரச்­சினை கார­ண­மாகக் குறித்த சம்­ப­வம் இடம்­பெற்­றது எனறு வீட்­டின் உரி­மை­யா­ளர் தெரி­வித்­தார். சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­களை வவு­னியா குற்­றத்­த­டுப்பு பொலி­ஸார் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.