Home பிரதான செய்திகள் முல்லைதீவில் விகாரையும், சிங்கள குடியேற்றத்தையும் எதிர்த்து தமிழர்கள் போராட்டம்

முல்லைதீவில் விகாரையும், சிங்கள குடியேற்றத்தையும் எதிர்த்து தமிழர்கள் போராட்டம்

பிரதான செய்திகள்:முல்லைத்தீவில் தமிழரின் தாயகப்பகுதியான ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பகுதிக்கும் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பகுதிக்கும் இடைப்பட்ட குருந்தூர் மலைப்பகுதியில் பௌத்த விகாரையும், சிங்கள குடியேற்றத்தையும் அமைக்க முற்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நெடுங்கேணிப்பகுதி பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் பௌத்தமத குருமார்கள் இச் செயற்திட்டத்தை இன்றைய தினம் முன்னெடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் மக்கள் “எமது பகுதியில் எவரும் குடியேற்றங்கள் அமைக்க கூடாது என்றும் எமது தமிழர் தாயகத்தை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்று“ கூச்சலிட்டு எதிர்த்து குறித்த வேலைத்திட்டத்தை தடுத்துள்ளனர். இப்பகுதியில் பௌத்த மதகுருமார்கள் அத்துமீறி படையெடுத்ததின் காரணத்தால் அமைதி இன்மை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எமது அரசிடம் குறித்த விடயம் தொடர்பில் கேட்டால் அப்படியொன்றும் நடக்கவில்லையென்றுதான் சொல்லும்.

இது இவ்வாறிருக்க நெடுங்கேணியூடாக தண்ணீர்முறிப்பு குருந்தூர்மலை பகுதியூடாக பதவியா நோக்கி செல்லும் வீதிகளையும் ஸ்ரீலங்கா அரசு அமைத்துள்ளது.

இது தொடர்பாக கேட்டால் தனக்கேதும் தெரியாது என அரசு சொல்ல அதற்கு தலையாட்டும் தமிழ் பிரதிநிதிகள்தான் எமது இன அழிப்பின் முக்கியமான செயற்பாடு இதுதான். எனவே இதை அனைத்து தமிழர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.