Home இந்திய செய்திகள் மாணவி சோபியா விடுதலைப்புலிகள் உறுப்பினராம் சு சுவாமி புலுடா

மாணவி சோபியா விடுதலைப்புலிகள் உறுப்பினராம் சு சுவாமி புலுடா

இந்திய செய்திகள்:நேற்றைக்கு முன் தினம் சென்னை – தூத்துக்குடி சென்ற விமானமொன்றில் பயணித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசையை நோக்கி பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்ட மாணவி சோபியா என்பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தினை சேர்ந்தவராகவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார் பாஜக முன்னணி தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி.

கனடாவில் கணித துறையில் ஆராய்ச்சி படிப்பு படித்துக்கொண்டிருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா விமான பயணத்தின் போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கண்டிக்கும் வகையில் பாஜக தமிழக தலைவர் தமிழிசையை நோக்கி முழக்கமிட்டதால் தமிழிசை, சோபியாவுக்கு எதிராக அளித்த புகாரின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளிவிடப்பட்டார்.

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான பாஜகவின் இத்தகைய போக்கினை ஜனநாயக சக்திகள் கண்டித்து வருகிற வேளையில் தமிழிசைக்கு எதிராக முழக்கமிட்ட சோபியா விடுதலைப்புலிகள் இயக்கத்தினை சேர்ந்தவராக இருக்க கூடும். அதன் காரணத்தினாலேயே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்து அதிரடி கிளப்பியுள்ளார் சுப்ரமணிய சாமி.