Home சர்வதேச செய்தி பிரித்தானியாவில் ரஷ்ய உளவாளி விஷமனிதர்கள் பகிரங்கம்

பிரித்தானியாவில் ரஷ்ய உளவாளி விஷமனிதர்கள் பகிரங்கம்

சர்வதேச செய்திகள்:பிரித்தானியாவை இந்த வருடத்தில் உலுக்கிய கொடிய இரசாயன நஞ்சூட்டல்சம்பவங்களின் சூத்திரதாரிகளாக கருதப்படும் இரண்டு ரஷ்யர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.இப்போது ரஸ்ய அரசதலைவர் விளடிமீர் புட்டின்தான் இதற்கு பொறுப்பு என இன்று பிரித்தானியாகுற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் கிரெம்ளின் இதனை உடனடியாகவே மறுத்துவிட்டது.

நஞ்சூட்டல் சூத்திரதாரிகளான இரண்டு ரஷ்யர்களும் அவர்களின் கடவுச்சீட்டுக்களில்உள்ள பெயர்களின் அடிப்படையில் இவர்கள் முறையே அலக்ஸான்டர் பெத்ரோவ் (Alexander Petrov)மற்றும் ருஸ்லான் பொஸிரோவ் (Ruslan Boshirov) எனக் கூறப்படுகிறது.

ஆனால் இவர்கள் இருவரும் ரஸ்ய இராணுவ புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள்என்பதால் இது இவர்களின் சொந்தப்பெயராக இருக்காது என்பதும் அவதானிக்கத்தக்க ஒருவிடயம்.

கடந்தமார்ச் மாதம் 4 ஆந்திகதி முன்னாள் ரஷ்யஉளவாளி ஸ்கிரிபால்மற்றும் அவரது மகள் யூலியா ஆகியோர் மீது உலகின் மிகக்கொடிய ரசாயனமாக அடையாளப்படுத்தபடும்நொவிசோக் என்ற கொடிய ரசாயனம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஸ்ய உளவு வலையமைப்பு குறித்ததகவல்களை ஸ்கிரிபால் பிரித்தானியாவுக்கு வழங்கியதால் அவர் குறித்த ஒரு வன்மத்தால்ரஸ்ய முகவர்கள் இதனை நடத்தியதாக கருதப்பட்டது.

அதன்பின்னர் ஏறக்குறையமூன்று மாதங்களுக்குப்பின்னர் வில்ட்ஷரில் அதே கொடிய ரசாயனத்தின் பாதிப்புக்கு இருவாசிக்கினர். அதில் ஒருவர் மரணித்தார் அதிர்ந்துவிட்டதுபிரித்தானியா.

முதலில் சலிஸ்பெரி நகரில் இடம்பெற்ற தாக்குதல் பிரித்தானியாவில்மட்டுமல்ல உலகளாவிய அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு பின்னால் ரஸ்யா தான் இருந்ததாக பிரித்தானியாகுற்றஞ்சாட்டியது. எனினும் ரஸ்யா இதனை மறுத்தது. பிரித்தானியாவில் இருந்து 23 ரஸ்யராஜதந்திரிகளும் வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் யார் இந்த தாக்தலை நடத்திய என்றவிடயத்தில் பிரித்தானியாவின்MI-5 மற்றும் MI-6 ஆகிய இரண்டு புலனாய்வுக்கட்டமைப்புக்களால்ஒரு முடிவுக்கு வரவில்லை.

கடந்த சிலமாதங்களாகவே அவை தலையை பிய்த்துக்கொண்டன.

இப்போது 6 மாதங்களுக்குப்பின்னர் அதற்குரிய சூத்திரதாரிகள் இருவர்அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் ரஸ்யாவில் இருந்து லண்டன் கற்விக்விமானநிலைத்தின் ஊடாக அவர்கள் லண்டனுக்கு எப்போது வந்தனர்.

லண்டனில் அவர்கள் எங்கு தங்கியிருந்தார்கள். முன்னாள் ரஷ்யஉளவாளிஸ்கிரிபால் அவரது மகள் யூலியா ஆகியோர் மீது தாக்குதலை நடத்த வோட்டர் லூ தொடருந்து நிலையத்தில்இருந்து எப்படி சலிஸ்பெரி நகருக்கு பயணித்தார்கள்

தாக்குதலுக்குப்பின்னர் எப்படி ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்துதப்பிச்சென்றார்கள் என்பது குறித்த விபரங்கள் வெளிப்பட்டுள்ளன.

அந்தந்த இடங்களில் இருந்து எடுக்கபட்ட சீசீரிவி எனப்படும் கண்காணிப்புஒளிப்பதிவு கருவிகளின் ஊடாக எடுக்கபட்ட காட்சிகளின் ஊடாக இவை ஆதாரப்படுத்தபட்டுள்ளன.

இப்போது மீண்டும்ஒருமுறை ரஸ்யாவிடம் பிரித்தானியா விளக்கம் கோரியுள்ளது.ஆனால் இதனை வழமைபோல ரஸ்யா நிராகரித்துள்ளதால் கொடிய நொவிசோக் ரசாயன அதிர்வுகள் கடும்ராஜதந்திர அதிர்வுகளாக இனிமாறும்.