Home உள்ளூர் செய்தி மட்டக்களப்பில் தமிழ்மக்களை அச்சமடைய செய்த 150 மோட்டார் சைக்கிள்கள் குழு

மட்டக்களப்பில் தமிழ்மக்களை அச்சமடைய செய்த 150 மோட்டார் சைக்கிள்கள் குழு

மட்டகளப்பு செய்திகள் மட்டக்களப்பில் நாளைய தினம் இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தால் மற்றும்எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுக்க 150 மோட்டார் சைக்கிள்களின் சென்ற பாரியகுழுவொன்று முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடியில் இருந்து இன்று நள்ளிரவு 150 மோட்டார் சைக்கிளில் பாரியகுழுவொன்று ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பகுதிகளை நோக்கிச் சென்றதை பொதுமக்கள் அவதானித்துள்ளதாக தெரியவருகின்றது.

ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களைச் சென்று சந்தித்து இது தொடர்பில் குறித்த குழுவினர் கலந்துரையாடியிருக்கலாம் எனதெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாளைய தினம் (07.09.2018) இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலை குழப்புவதற்கான மற்றும்பாதக நிலைகளை ஏற்படுத்துவது தொடர்பில் குறித்த குழுவினரால் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர்ப்போத்தல்தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாரிய எதிர்ப்புபோராட்டம் நாளைய தினம் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. >இதனால் அப் பகுதி தமிழ் மக்கள் பீதியில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.