Home உள்ளூர் செய்தி ஹர்த்தாலால் முடங்கியது மட்டக்களப்பு-குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

ஹர்த்தாலால் முடங்கியது மட்டக்களப்பு-குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

உள்ளூர் செய்தகள்:மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அன்றாட நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – பதுளை வீதி பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டு வருகின்ற போத்தல் குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மட்டக்களப்பின் பல பகுதிகளில் இன்று தனியார் பேருந்துகள் எதுவும் போக்குவரத்தில் ஈடுபடாத நிலையில் இ.போ.சபையின் ஒரு சில பேருந்துகள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டுள்ளன.

அத்துடன், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் என்பன முற்றாக மூடப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் குறைவாகவே பதிவாகியுள்ளன.

இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல வீதிகள் வெறிச் சோடி காணப்படுகின்றதையும் அவதானிக்க முடிந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படும் சில பகுதிகளில் வீதியை மறித்து டயர்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.