Home உள்ளூர் செய்தி கிழக்கை சிங்களம் மற்றும் முஸ்லிம்களுக்கு கொடுத்துவிட்டு தமிழ் தேசிய பேசும் துரோகி கருணா

கிழக்கை சிங்களம் மற்றும் முஸ்லிம்களுக்கு கொடுத்துவிட்டு தமிழ் தேசிய பேசும் துரோகி கருணா

உள்ளூர் செய்திகள்:என் தமிழ் தேசிய அரசியல் தூர நோக்கம் விரைவில் புலப்படும் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த டுவிட்டர் பதிவில்,

நான் எடுத்த முடிவுகள் என்னையும் என் குடும்பத்தையும் பெரிதும் பாதித்திருந்தாலும் நான் எப்பொழுதும் வருந்தியதில்லை.

என் தமிழ் தேசிய அரசியல் தூர நோக்கம் விரைவில் புலப்படும். புலிகளின் தலைமைகளுக்கு அது நன்றாகவே தெரியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.