Home யாழ் செய்தி யாழில் ஆவா குழுவின் முக்கிய நபர் கைது போலீஸ் தகவல்

யாழில் ஆவா குழுவின் முக்கிய நபர் கைது போலீஸ் தகவல்

யாழ் செய்திகள்:யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடு உடைத்தல் போன்ற சம்பவங்களின் பிரதான சூத்திரதாரியான ஆவா குழுவின் எதிரணி இளைஞர் ஒருவரை புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞரே இன்று புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரம்பத்தில் ஆவா குழுவுடன் செயற்பட்ட இந்த நபர், ஆவா குழுவில் இருந்து வெளியேறி தனியாக பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

பொலிஸாரிடம் இருந்து தலைமறைவாகியிருந்த இந்த இளைஞர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வரும் போது, யாழ். நகர் பகுதியில் வைத்து இன்று யாழ்.மாவட்ட புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும், விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.