Home இந்திய செய்திகள் இந்தியாவில் கணவன் வெளிநாடு மனைவி கள்ளக்காதல் கொலையில் முடிந்தது

இந்தியாவில் கணவன் வெளிநாடு மனைவி கள்ளக்காதல் கொலையில் முடிந்தது

இந்திய செய்திகள்:இந்தியாவின் சிவகங்கை மாவட்டத்தில் 3 பெண் பிள்ளைகள் இருந்த நிலையிலும் மற்றொரு ஆணுடன் தொடர்பில் இருந்த மனைவியை கணவர் கொலை செய்துள்ளார்.

செல்வராஜ் என்பவர் தனக்கு 3 பெண் பிள்ளகைள் இருப்பதால் அவர்களை படிக்க வைக்க மற்றும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பணம் தேவை என்பதால், வெளிநாட்டில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு அவர் வெளிநாடு செல்லவில்லை. ஏன் மீண்டும் வெளிநாடு செல்லவில்லை என்று மனைவி சரஸ்வதி அடிக்கடி கேட்டுள்ளார்.

சிவகங்கையிலேயே ஜேசிபி ஆபரேட்டர் வேலை பார்க்கப்போவதாக கூறிய அவர், அந்த வேலை கிடைத்தவுடன் அதனை செய்துவந்தார்.

இந்த நிலையில், சரஸ்வதிக்கும், பக்கத்து கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் தவறான தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த செல்வராஜ் கோபமடைந்தார். இதனால்தான் வெளிநாடு போகவில்லையா என அடிக்கடி சரஸ்வதி கேட்டது தெரியவந்தது

நமக்கும் 3 பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், நீ இப்படி செய்யலாமா? இது அவமானம் என செல்வராஜ் தனது மனைவியை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை.

இந்தநிலையில் வாலிபருடன் சரஸ்வதி தனிமையில் இருப்பதாக செய்தி கேள்விப்பட்டு, வீட்டுக்கு சென்ற செல்வராஜ், மனைவி சரஸ்வதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த செல்வராஜ், கடப்பாரையால் தனது மனைவியை கடப்பாரையால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சரஸ்வதி சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிந்து பொலிசார் செல்வராஜை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.