Home உள்ளூர் செய்தி கிளிநொச்சி, இரணைத்தீவு கடலில் மிதந்து வந்த கேரள கஞ்சா

கிளிநொச்சி, இரணைத்தீவு கடலில் மிதந்து வந்த கேரள கஞ்சா

உள்ளூர் செய்திகள்:கிளிநொச்சி, இரணைத்தீவை அண்மித்த கடற்பரப்பில் மிதந்துக்கொண்டிருந்த கேரள கஞ்சா தொகையொன்றினை கடற்பரையினர் மீட்டுள்ளனர்.

நேற்று மீட்கப்பட்ட குறித்த கேரள கஞ்சா 284 கிலோ கிராம் நிறையுடையதென கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகளை கடற்படையினர் முழங்காவில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கடல் மார்க்கமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சந்தேகநபர்கள் சிலர் கொண்டு வந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.