Home சினிமா அரசிலில் குதிக்கிறார் நடிகர் விஜய் வெளிவந்த தகவல்

அரசிலில் குதிக்கிறார் நடிகர் விஜய் வெளிவந்த தகவல்

தமிழ் செனிமா:தளபதி விஜய் அரசியலுக்கு வர வேண்டும். தமிழகத்தை ஆள வேண்டும் என அவரது ரசிகர்கள் பலர் தொடர்ந்து கூறி வருகின்றனர். தளபதி விஜயும் அதற்காக தயாராகி வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் சர்கார் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள ராதா ரவி சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார். அதற்காக அவர் தற்போது நிறைய கற்று கொண்டு வருகிறார். அரசியலுக்கு வர பொறுமை தான் முக்கியம். அதை தான் விஜய் தற்போது செய்து வருகிறார் என கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய ரசிகர்களை எப்படி கையாள வேண்டும், மக்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதையும் விஜய் நன்றாக தெரிந்து வைத்துள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.