Home இந்திய செய்திகள் சென்னை அபிராமி ஜெயிலுக்கு போக டப்ஸ்மாஷ் வீடியோவே காரணம்-வாக்குமூம்

சென்னை அபிராமி ஜெயிலுக்கு போக டப்ஸ்மாஷ் வீடியோவே காரணம்-வாக்குமூம்

டப்ஸ்மாஷ் வீடியோவே நான் சிறைக்கு வருவதற்கு காரணம் என்று, தன் சக கைதிகளிடம் அபிராமி தெரிவித்துள்ளதார்.

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஜய். தனியார் வங்கியில் பணியாற்றி வருகின்றார். அவருடைய மனைவி அபிராமி. இவருக்கும் அப்பகுதியில் பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்ற வாலிபருக்கு ‘பழக்கம்’ ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கணவன் மனைவி உறவு அளவுக்கு சென்றுள்ளது. இந்த உறவுக்கு தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவர் இடைஞ்சலாக இருப்பதை உணர்ந்த அபிராமி, அவர்களை கொலை செய்வதற்கான நேரத்தை பார்த்து காத்துக்கொண்டிருந்தார்.

அதற்கு ஏற்றவாறு கடந்த இரண்டு நாட்களுக்கும முன் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம் கலந்து கொன்றுள்ளார். கணவர் அன்று வீட்டுக்கு வர தாமதம் ஆனதால் அவர் அபிராமியின் கொலை முயற்சியில் இருந்து தப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அபிராமியை கைது செய்த காவல்துறையினர், அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், அபிராமி டப்ஸ்மாஸ் செய்த வீடியோ இணையத்தில் பட்டைய கிளப்பி வருகின்றது. நடிகைகளே தோற்று போகும் அளவுக்கு அவரின் நடிப்பு திறமை உள்ளதாக இணையதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில், இந்த வீடியோ பற்றி தன்னுடைய சக கைதிகளிடம் பேசிய அபிராமி, நான் ஒழுக்கமாக தான் இருந்தேன், மியூசிகலியில் வீடியோ போட்ட பிறகு தான், சில முகம் தெரியாத நபர்களிடம் பழக்கம் ஏற்பட்டது. என்னுடைய வீடியோவை பாராட்டும் நபர்களிடம் நான் தொடர்ச்சியாக சாட் செய்வேன். சுந்தரும் என்னுடைய டாப்ஸ்மேஷை அடிக்கடி சிலாகித்து பேசுவார். செல்போன் ஒன்றே நான் சிறையில் இருக்க காரணமாக அமைந்து விட்டது என்றும் அவர் தெரிவித்ததாக சக கைதிகள் கூறியுள்ளனர்.