Home வீடியோ அடிக்க கூடாது… குணமா சொல்லனும்… இணையத்தை தெறிக்கவிட்ட சிறுமி!

அடிக்க கூடாது… குணமா சொல்லனும்… இணையத்தை தெறிக்கவிட்ட சிறுமி!

வீடியோ பல்சுவை:தாய்க்கு குழந்தை அறிவுரை சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாம் இதுவரை எத்தனையோ வீடியோக்களை இணையத்தில் கடந்து சென்றிருப்போம். ஆனால் அவைகளில் சில வீடியோக்கள் மட்டும் மனதை விட்டு அகலாது. அந்த வகையில் நேற்று வெளியான ஒரு வீடியோ ஒன்று எல்லாருடைய மனதிலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது என்றால், அது மிகையல்ல.

அந்த வகையில் தன்னை அடித்த அம்மாவிற்கு, 4 வயது சிறுமி ஒருவர் ‘பாடம்’ நடத்திய சம்பவம் எல்லோருடைய மனதிலும் உள்ள கவலைகளை மறைய செய்யும் விதமாக இருந்தது.

அவர்கள் இருவருக்குமான உரையாடல் வருமாறு:

தாய்: சேட்டை பண்றது தப்பா? தப்பில்லையா? பேச்ச மாத்தாம பதில் சொல்லு…

சிறுமி: தப்புத்தான்.. அதுக்கு என்ன சொல்லணும்?

தாய்: அதுக்குத்தான் அடிக்கிறது…புரிஞ்சதா?

சிறுமி: அடிச்சா தப்பு…

தாய்: என்ன?

சிறுமி: மெதுவா குணமா வாய்ல சொல்லணும். திட்டாம.. .அடிக்காம வாய்ல சொல்லணும்…

தாய்: அதுக்கு நீ சேட்டை பண்ணாம இருக்கணும்…

சிறுமி: சேட்டை பண்ணாலும் வாய்ல குணமா சொல்லணும்…

தாய்: இப்ப எதுக்கு நீ இப்படி அழுதுகிட்டு இருக்கிற?

சிறுமி: அடிச்சா… அழுகாம என்ன செய்வாங்க? அப்பறம் நீயே சொல்லு..

தாய்: சேட்டை பண்ணா அடிக்காம என்ன பண்ணுவாங்க.. நீ சொல்லேன்…

சிறுமி: குணமா வாய்ல சொல்லணும்….