Home வவுனியா செய்திகள் வவுனியாவில் 21 வயது இளைஞரொருவர் தூக்கில்- தமிழர்களை காவு வாங்குது எது?

வவுனியாவில் 21 வயது இளைஞரொருவர் தூக்கில்- தமிழர்களை காவு வாங்குது எது?

வவுனியா செய்திகள்:வடக்கின் முக்கிய மாவட்டமான வவுனியாவின், பாரதிபுரம் பகுதியில் நேற்று மாலை இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

21 வயதுடைய கௌரி சங்கர் என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆடு மேய்க்க சென்ற நபரொருவர் சடலத்தினை பார்த்து உடனடியாக பொதுமக்கள், கிராம சேவையாளர் மற்றும் பொலிஸார் ஆகியோருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த தகவலின் அடிப்படையில் நெளுக்குளம் பொலிஸார், இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரதீப் மற்றும் வேலன்குளம் கிராம சேவையாளர் சர்வேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தினை பார்வையிட்டு இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

வவுனியா பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தடயவியல் பொலிஸார் மரணம் தொடர்பான பகுப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே குறித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.