Home சமூக சீர்கேடு ஆக்காவையும் தங்கையையும் கலியாணம் செய்தவருக்கு விளக்கமறியல்

ஆக்காவையும் தங்கையையும் கலியாணம் செய்தவருக்கு விளக்கமறியல்

சமுக சீர்கேடு:மனைவி உயிரோடிருக்கையில் மனைவியின் தங்கையை திருமணம் செய்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போதே சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசாரிடம் கேட்டபோது,

இது இலங்கை முஸ்லிம் விவகாரத்து சட்டத்தின் கீழும், முஸ்லிம் சரியா சட்டத்தின் கீழும் பாரிய குற்றமாகும்.

எனவெ குறித்த நபர் குற்றவாளியாக இனம் காணப்படும் பட்சத்தில் 03 வருட சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்படுவார் என தெரிவித்துள்ளார்.