Home பிரதான செய்திகள் ஐநா மனித உரிமை புதிய தலைவர் மிச்செலே பச்செலட் இலங்கை தொடர்பில் உரை

ஐநா மனித உரிமை புதிய தலைவர் மிச்செலே பச்செலட் இலங்கை தொடர்பில் உரை

பிரதான செய்தகள்:ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் புதிய தலைவர் மிச்செலே பச்செலட் தனது முதலாவது உரையில் இலங்கை குறித்து கரிசனைகளை வெளியிட்டுள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 39 அமர்வினை இன்று ஆரம்பித்து உரையாற்றிய போதே இவ்வாறு கரிசனை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகள் நிலைமாற்றுக்கான நீதியை நடைமுறைப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் மிகவும் மெதுவான நகர்வுகளையே மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் இலங்கையின் தற்போதைய நகர்வுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் புதிய தலைவர் மிச்செலே பச்செலட்,

காணாமல்போனோர் குறித்த அலுவலகம் தற்போதே மக்களின் கருத்துக்களை அறிய ஆரம்பித்துள்ளது.காணாமல்போனோர் குறித்த அலுவலகம் துரிதமாக பணியாற்ற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு பதில்களை அலுவலகம் வழங்கவேண்டும்.

பொறுப்புக்கூறுதல் மற்றும் உண்மையை கண்டறிவதில் அதிகளவு முன்னேற்றத்தை கண்டிருந்தால் நாட்டின் நிரந்தர ஸ்திரதன்மையும் செழிப்பும் மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கும்.

அத்துடன், இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற இனவாத மற்றும் இனங்களிற்கு இடையிலான சம்பவங்கள் கவலையளிக்கின்றன“ என தெரிவித்துள்ளார்.