வவுனியாவில் 15 வயதுடைய சிறுமி கடத்தல் இளைஞர் கடத்தல்

வவுனியா செய்திகள்:வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கடத்தல் சம்பவம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ள நிலையில், சந்தேகநபரான இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன், அவருடன் அநுராதபுரம் பகுதியில் தங்கியிருந்துள்ளார்.

Advertisement

இவர்கள் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து சிறுமியின் உறவினர்கள் அநுராதபுரத்திற்கு சென்று சிறுமியை அழைத்து வந்துள்ளதுடன், நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் “குறித்த இளைஞன் தமது மகளை பலாத்காரமாக அழைத்துச் சென்றுள்ளதாக” முறைப்பாடு ஒன்றினையும் பெற்றோர் பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து நேற்று வவுனியா, சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின் இளைஞனை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.