Home உள்ளூர் செய்தி இலங்கையில் மீண்டும் பெற்றோல் விலையேற்றம் புதிய விலை வெளியாகியது

இலங்கையில் மீண்டும் பெற்றோல் விலையேற்றம் புதிய விலை வெளியாகியது

எரிபொருட்களின் விலையானது கடந்த நள்ளிரவிலிருந்து அதிகரித்துள்ளது. இதன்படி இவற்றின் விலைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை தொடர்பில் விலை சூத்திர அடிப்படையிலான அதிகாரிகளின் குழு நேற்றுக்கூடி ஆராய்ந்ததையடுத்து புதிய விலைப்பட்டியல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த புதிய விலைப்பட்டியலின்படி எரிபொருட்களின் விலை பின்வருமாறு அமைந்துள்ளது:

ஒக்ரேன்92 வகைப் பெற்றோலின் முன்னைய விலை 145 ரூபாவிலிருந்து 149 ரூபாவிற்கு தற்போதைய விலையாக அதிகரிக்கின்றது.
ஒக்ரேன்95 வகைப் பெற்றோலின் முன்னைய விலை 157 ரூபாவிலிருந்து 161 ரூபாவாக அதிகரிக்கின்றது.
ஓட்டோ டீசலின் முன்னைய விலை 118 ரூபாவிலிருந்து 123 ரூபாவுக்கு அதிகரிக்கின்றது.
சுப்பர் டீசலின் முன்னைய விலை 130 ரூபாவிலிருந்து 133 ரூபாவுக்கு அதிகரிக்கின்றது.
இதேவேளை நல்லாட்சி அரசாங்கம் எனச் சொல்லப்படும் தற்போதைய அரசாங்கத்தினால் மிகக் குறிகிய காலத்தில் இரண்டாவது தடவையாகவும் எரிபொருள் விலை ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.