Home சர்வதேச செய்தி அமெரிக்காவில் விசித்திர தெரபி இதையெல்லாமா குடிப்பாங்க?

அமெரிக்காவில் விசித்திர தெரபி இதையெல்லாமா குடிப்பாங்க?

சர்வதேச செய்திகள்:அமெரிக்காவில் உள்ள இடாகோ என்ற பகுதியைச் சேர்ந்த வானியல் ஆராய்ச்சியாளர் கிரிஸ்டோ டெப்ராக்கியோ என்பவரே இந்த தெரபியை பரப்பி வருபவர். இவர் உடல் எடை அதிகரிப்பால் கஷ்டப்பட்டு வந்த நிலையில், ஆன்லைனில் ஒரு செய்தியை பார்த்து இருக்கிறார். அதில் சிறுநீர் குடித்தால் உடல் எடை குறையும் என போடப்பட்டு இருந்திருக்கிறது.

உடனே அந்த முயற்சியில் அவர் ஈடுபடவே நல்ல பலன்கள் கிடைத்துள்ளது. வெகு சில நாட்களில் சுமார் 13 கிலோ எடையை குறைத்துள்ளார். மேலும், சிறுநீர் குடிப்பதால் தாம் ஒரு சூப்பர் மேன் போல் உணர்வதாகவும் அவர் பெருமையுடன் கூறுகிறார். இதுமட்டுமின்றி, அவர் சிறுநீரை அவரது முகத்தில் மசாஜ் செய்யவும், முகம், கண்களை கழுவவும் உபயோகிக்கிறார் இதனால், தோல் சுருக்கம் குறைந்து இளமை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இந்த புதிய சிறுநீர் தெரப்பி முறையை, முகப்பருக்களால் கஷ்டப்பட்டு வந்த தனது தோழிக்கு அவர் அறிமுகப்படுத்தவே, அவரும் அதனை முயற்சி செய்து நல்ல பலன் பெற்றுள்ளாராம். இதைத்தொடர்ந்து, தினமும் தனது சிறுநீரால் முகத்தை மசாஜ் செய்து கொடுத்து, மீண்டும் முகப்பரு பிரச்சனை வராமல் பாதுகாப்பதுடன், மிகப்பொலிவான சருமத்தை பெற்று வருகிறாராம்.

இந்த தெரபி முறை தற்போது ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்து மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும், இதுவெறும் கேலிக்கூத்து என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இந்த சிறுநீர் தெரபி மூலம் பலனடைந்ததாக முயற்சி செய்துபார்த்த பலரும் ஆன்லைனில் பதிவிட்டு வருவதால், இந்த தெரபி பலராலும் தற்போது முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் இந்த சிறுநீர் தெரபியை தாமும் செய்து, பிறருக்கும் அறிவுறுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.