Home மருத்துவம் நீங்கள் இரவு படுக்கையில் செல்போன் பாவித்தால் வரும் பாதிப்புகள்

நீங்கள் இரவு படுக்கையில் செல்போன் பாவித்தால் வரும் பாதிப்புகள்

மருத்துவம்:இப்போதெல்லாம் சிறு பிள்ளைகள் தொடக்கம் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் ஓடி விளையாடிய சிறு பிள்ளைகள் இப்போது செல்போன்களிலேயே விளையாடுகின்றனர்.

முன்பெல்லாம் உற்றார் உறவினர் வீட்டுக்குச் சென்று அவர்களுடன் பேசி மகிழ்ந்த பெரியவர்கள் இப்போதெல்லாம் செல்போனில் மெசேஜ் அனுப்பி விட்டு செல்போனில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

சொல்லப் போனால், இந்த செல்போன்களால் தற்போது வேலை செய்வது குறைந்து விட்டது என்று தான் கூற வேண்டும். அதனால் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து எம்மவர்கள் நோய் வாய்ப்படுகின்றனர்.

அத்துடன் பெரியவர் சிறியவர் என்ற வித்தியாசம் இன்றி இப்போதெல்லாம் செல்போனை இரவு நேரத்திலும் உபயோகிக்கின்றனர். படுக்கைக்குச் சென்ற பின்னர் செல்போன் உபயோகிப்பது என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் இந்த செல்போனில் இருந்து வெளிவரும் நீலநிற ரேடியோஅக்டிவ் கதிர்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன.
படுக்கையில் வைத்து செல்போனை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன என்பது தொடர்பில் இப்போது நாம் பார்ப்போம்.

01. தூக்கமின்மை
செல்போனில் இருந்து வரும் நீலநிறக் கதிர்கள் எமது உடம்பில் உற்பத்தியாகும் மெலட்டொனின் எனும் ஹோர்மோன் உற்பத்தியை தடை செய்கிறது. இதனால் காலப் போக்கில் தூக்கமின்மை, உடல் எடை அதிகரித்தல், வயதான தோற்றம், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் என்பன ஏற்படும்.

02. விழித்திரை பாதிக்கப்படுதல்
இரவு நேரங்களில் செல்போன் உபயோகிக்கும் போது அதிலிருந்து வரும் நீலநிறக் கதிர்கள் விழித்திரையை பாதிக்கின்றன. இதனால் காலப் போக்கில் கண்பார்வை குறைதல் மற்றும் கட்ராக்ட் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு.

03. புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு
இரவு நேரங்களில் செல்போன் பாவிக்கும் பொழுது அதிலிருந்து வரும் நீலநிறக் கதிர்களால் மார்பக மற்றும் புரொஸ்டேட் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. எமது உடலில் உள்ள மெலட்டொனின் ஹோர்மோனானது புற்றுநோய்க்கு எதிராக செயற்படும் தன்மை கொண்டது. எனினும், நீலநிறக் கதிர்களால் இந்த ஹோர்மோன் உற்பத்தி தடைப்படுவதால் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கின்றது.