Home யாழ் செய்தி யாழ் காங்கேசன் துறையில் ஆணின் எலும்புகூடு மீட்பு

யாழ் காங்கேசன் துறையில் ஆணின் எலும்புகூடு மீட்பு

யாழ் செய்திகள்:யாழ்ப்பாணம் காங்கேசன் துறைப் பகுதியில் இன்று காலை எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காங்கேசன் துறைப் பகுதியிலுள்ள தொடருந்துத் தடத்திலிருந்து ஐம்பது மீட்டர் தொலைவிலேயே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த எலும்புக்கூடு ஆண் ஒருவருடையது என பொலிஸாரால் கூறப்பட்டுள்ள அதே நேரம் நான்கு மாதங்களைக் கடந்ததாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் எமது செய்திப்பிரிவு காங்கேசன் துறைப் பொலிஸ் நிலையத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, குறித்த எலும்புக்கூடு தொடர்பில் தம்மிடம் மேலதிக தகவல்கள் இல்லை எனவும் பிற்பகல் இரண்டு மணிக்கு நீதவான் குறித்த இடத்திற்கு வருகைதந்தபின்னரே மேலதிக தகவல்கள் தொடர்பில் தெரியவரும் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.