Home உள்ளூர் செய்தி தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- சி.வி.கே.சிவ­ஞா­னம்

தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது- சி.வி.கே.சிவ­ஞா­னம்

உள்ளூர் செய்திகள்:தொல்­பொ­ருள் திணைக்­க­ளம், வன­வ­ளத் திணைக்­க­ளம் என்­பன எல்லை மீறிச் செயற்­ப­டு­வார்­க­ளா­னால் அந்­தத் திணைக்­க­ளங்­களை மாகா­ண­ச­பையே முற்­று­கை­யிட வேண்டி வர­லாம். இவ்­வாறு வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் தொல்­லி­யத் திணைக்­க­ளத்­தின் ஆக்­கி­ர­மிப்­புத் தொடர்­பில், மாகா­ண­சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன் கருத்­துக்­கள் முன்­வைத்­தார். அவர் இது தொடர்­பில் தெரி­வித்­த­தா­வது,

தொல்­லி­யல் திணைக்­க­ளம் வடக்­கில் மத முரண்­பா­ டு­களை ஏற்­ப­டுத்­தும் திணைக்­க­ள­மா­கச் செயற்­ப­டு­கின்­றதா என்ற சந்­தே­கம் ஏற்­ப­டு­கின்­றது. ஏனெ­னில் அவர்­கள், புரா­தன இந்து இடங்­களை அழித்து அங்கு பௌத்த தலங்­களை நிறு­வு­வ­தற்­கான வேலை­யைச் செய்து வரு­கின்­றார்­கள். தொல்­லி­யல் திணைக்­க­ளத்­தின் வேலை­யைச் செய்­வதை விடுத்து அவர்­கள் மத திணிப்­பையே செய்­கின்­றார்­கள்.

2013ஆம் ஆண்டு வெளி­யி­டப்­பட்ட அர­சி­த­ழின் ஊடாக முல்­லைத்­தீ­வில் 47 இடங்­கள் தொல்­லி­யல் திணைக்­க­ளத்­துக்­குள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளன. சில நாள்­க­ளுக்கு முன்­னர் குருந்­தூர் மலை­யில் பிக்­கு­கள் தலை­மை­யில் புத்­தர் சிலை வைப்­ப­தற்கு முயற்சி எடுக்­கப்­பட்­டது. அந்­தப் பகுதி மக்­க­ளால் தடுத்து நிறுத்­தப்­பட்­டது.

நாயாறு நீரா­வி­யடி ஏற்­றப் பகு­தி­யில் விகாரை அமைப்­ப­தற்கு காணி அள­வீடு செய்ய முற்­பட்­ட­போது மக்­கள் தடுத்து நிறுத்­தி­னர். வெடுக்­கு­நாறி மலை­யில் இந்­துக் கோயி­லில் வழி­பாட்டை நிறுத்த முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.

தொல்­லி­யல் திணைக்­க­ளம் தொன்­மை­யான இடங்­களைக் கண்­ட­றிந்து அடை­யா­ளப்­ப­டுத்திப் பாது­காப்­ப­டது என்­பாற்கு அப்­பால் சிலை­களை நிறு­வு­வ­தற்­கும், விகா­ரை­கள் அமைக்­கப்­ப­டு­வ­தற்­கும்­தான் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது – என்­றார்.

அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், தொல்­லி­யல் திணைக்­க­ளத்­தின் பணிப்­பா­ளர் பிக்கு ஒரு­வர் என்று நினைக்­கின்­றேன். அவ­ரால் பக்­கச்­சார்­பின்றிச் செயற்­பட முடி­யாது. இது தொடர்­பில் அரச தலை­வ­ருக்கு கடி­தம் அனுப்ப இருக்­கின்­றேன். வன­வ­ளத் திணைக்­க­ளம், தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் என்­பன எல்லை மீறிச் செயற்­ப­டு­கின்­றன.

பொறு­மை­யாகத் தொடர்ந்­தும் பார்த்­துக் கொண்­டி­ருக்க முடி­யாது. அந்­தத் திணைக்­க­ள ங்­களை மாகா­ண­ச­பை­யாக நாம் முற்­று­கை­யி­ட­வேண்டி ஏற்­ப­டும். இந்த வார்த்­தையை சபை­யில் இது­வரை நான் பாவித்­த­தில்லை. ஆனால் அவர்­க­ளின் வரம்பு மீறிய செயற்­பாட்டை நாம் பார்த்­துக் கொண்­டி­ருக்க முடி­யாது – என்­றார்.

இந்த விவா­தத்­தில் கருத்து தெரி­வித்த மாகா­ண­சபை உறுப்­பி­னர் அஸ்­மின், தொல்­லி­யல் திணைக்­க­ளத்­தி­னர் சம்­பந்­தப்­பட்ட மாவட்­டச் செய­லர் ஊடா­கவே வரு­கின்­றார்­கள். மாவட்­டச் செய­லர்­கள் தொல்­லி­யல் திணைக்­க­ ளத்­தி­னர் கோரும் அனு­ம­தியை மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் சமர்­பிக்க வேண்­டும்.

மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் அனு­மதி பெற்ற பின்­னரே தொல்­லி­யல் திணைக்­க­ளத்­தி­னரை செயற்­பட அனு­ம­திக்­கும் வகை­யில் பொறி­முறை உரு­வாக்­கப்­பட வேண்­டும் – என்­றார்.