Home யாழ் செய்தி உங்கள் காணி வேண்டுமானால் யாழ் கோட்டையை தாருங்கள் இராணுவம் மீரட்டல்

உங்கள் காணி வேண்டுமானால் யாழ் கோட்டையை தாருங்கள் இராணுவம் மீரட்டல்

யாழ் செய்திகள்:யாழில் உள்ள கோட்டையை இராணுவத்திற்கு கொடுத்தால், மக்களில் காணிகளை மக்களிடம் திருப்பிச் செலுத்த இராணுவம் தாயாராக உள்ளது என இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இதைப்பற்றி பாலில் இராணுவ தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், , “யாழில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் பல ஏக்கர் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடம் கையளித்து வருகின்றோம். இன்னமும் கொடுக்கவுள்ளோம்.

யாழ் கோட்டை பகுதியை இராணுவத்தினருக்கு கொடுத்தால் யாழில் உள்ள இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டு ஏனைய பகுதிகளை அதன் உரிமையாளர்களிடம் கொடுக்க தயாராக உள்ளோம். என இராணுவ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளது.