Home இந்திய செய்திகள் நல்ல கதையா திருடுங்கடா விஜய்யை கலாய்த்த ஹெச். ராஜா

நல்ல கதையா திருடுங்கடா விஜய்யை கலாய்த்த ஹெச். ராஜா

இந்திய செய்தி:சர்கார் பட சர்ச்சை பற்றி பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா சூசகமாக கலாய்த்து டுவீட் செய்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்திருக்கும் சர்கார் திரைப்படம், கதைத் திருட்டு உட்பட பல்வேறு சர்ச்சைக்களுக்கு பிறகு தீபாவளியான நேற்று (செவ்வாய்கிழமை) உலகமெங்கும் வெளியானது.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலை விமர்சிக்கும் வகையில் அமைந்திருக்கும், இத்திரைபடத்தை சன்பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.

படம் தற்போது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும்நிலையில், சர்கார் குறித்த சர்ச்சைக்குரிய டுவீட்டை, பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘படித்ததில் பிடித்தது’ என ஆரம்பித்து, ‘கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா’ என ஒருமையில் கூறியவாறு பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு சர்காரை குறி வைத்துதான் பதிவிட்டிருப்பதாக் கூறி, சமூகவலைதள வாசிகள் ஹெச். ராஜாவை விமர்சித்து வருகின்றனர்