Home மருத்துவம் உங்கள் மூளைக்கு சுறுசுறுப்பு தரும் உணவுகள் இவைதான்

உங்கள் மூளைக்கு சுறுசுறுப்பு தரும் உணவுகள் இவைதான்

பொது மருத்துவம்:மூளை மிகவும் அத்தியவசியமான உடல் உறுப்பு. தலையில் பலத்த அடி ஏற்படும் போதும், குலுங்கி போகும் போதும் மூளை பாதிப்படைந்து விடுகிறது. ஆனால் இந்த மூளைப் பாதிப்புக்களை இலகுவாக உணவினால் சரி செய்ய முடியும்.

சிறிய மூளை பாதிப்புக்களின் போது மூளையில் உள்ள கலங்கள் தற்காலிகமாக பாதிப்படைந்து விடும். ஆனால் பலத்த பாதிப்பு ஏற்படும் போது, திசுக்கள் கிழிந்து, சிராய்ப்புக் காயங்கள், இரத்தப் போக்கு என்பன மூளையில் ஏற்படும். இதனால் தொடர்ச்சியான பாதிப்பும், மூளைச் சாவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

மூளைப் பாதிப்பினால் மனம் மற்றும் உடல் அளவில் பல பாதிப்புக்களை சந்திக்க நேரிடும். நினைவு இழத்தல், பேசுவதில் கடினம், தலை வலி, சோர்வு, தலைச் சுற்று, தூங்க முடியாமை போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும்.

இவ்வாறு மூளையில் ஏற்படும் சிறிய பாதிப்புக்களை ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் குறைக்க முடியும்

மூளைப் பாதிப்பை சரி செய்யும் உணவு வகைகள் சில:

1. ஒமேகா-3 அமிலம் உள்ள உணவுகள்:
ஒமேகா-3 அமிலம் உள்ள மீன் உணவுப் பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதனால் மூளையின் இயல்புத் தன்மையை அதிகப்படுத்தி, நரம்புகளின் பாதிப்புக்களை இலகுவாக குணப்படுத்தும்.

2. விட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்.
விட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகளான கடலை, கீரை வகைகள் மற்றும் ஒலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய்களைப் பயன்படுத்துவதனால் மூளை நரம்புகளின் பாதிப்புக்களை இலகுவாகக் குணப்படுத்த முடியும். விட்டமின் ஈ நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் அதன் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்யும்.

3. மஞ்சள்.
மஞ்சள் உணவின் நிறத்தை மஞ்சளாக மாற்றுவதுடன், அதில் உள்ள குர்குமின் மூளையின் பாதிப்பிலிருந்து விரைவான தீர்வைப் பெற்றுத் தரும். இது ஒக்ஸிஜன் தாக்கத்தினால் ஏற்படும் அல்சைமர் நோயைக் குணப்படுத்துவதுடன், கொழுப்பு, மற்றும் நைற்றிக் அமிலத்தின் தாக்கத்தில் இருந்தும் தீர்வைத் தரும்.

4. அமினோ அமிலம் உள்ள உணவுகள்:
அமினோ அமிலங்களால் உடலின் திசுக்கள், கலங்கள், தசைகள் உருவாகியுள்ளன. இது உடலின் பல செயற்பாடுகளைச் செய்வதுடன், நரம்புகளினால் மூளைக்குச் செய்தி அனுப்பும் செயற்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அமினோ அமிலங்கள் உள்ள உணவு நிரப்பிகள் அல்லது புரதம் நிறைந்த மெலிந்த சிக்கன், மீன் போன்றவற்றை உட்கொள்வதனால் மூளை நரம்புகளின் பாதிப்பிற்கு தீர்வு கிடைக்கும்.

5. கோலின் அதிகம் உள்ள உணவுகள்:
கோலின் நீரில் கரையும் ஊட்டச்சத்து. இது நரம்புகளின் செயற்பாட்டில் முக்கிய பங்கை வகிப்பதுடன், அதன் விருத்திக்கும் வளர்ச்சிக்கும் உதவும். அது மட்டுமல்லாது புற்றுநோய்களில் இருந்தும் தீர்வைத் தரும். கோலின் அதிகம் உள்ள முட்டை மஞ்சள் கரு, ஆட்டு ஈரல், பால் பொருட்கள், ஊற வைத்த கடலை, பச்சை காய் வகைகளை உட்கொள்ள வேண்டும்.

6. விட்டமின் பி-12 நிறைந்த உணவு:
விட்டமின் பி-12 நரம்புகளையும், இரத்தக் கலங்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நரம்புக் கலங்களில் படலத்தை உருவாக்கி அதனை பாதுகாக்கும். இது நரம்பு பாதிப்பை சரி செய்து, மூளையின் செயற்பாட்டை மேம்படுத்தும். விட்டமின் பி-12 முட்டை, இறைச்சி, பால் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

7. மங்கனீஸ் உள்ள உணவுகள்:
மங்கனீஸ் முழு தாணியங்கள், கடலை, காய் வகைகள், பழங்களில் அதிகம் உள்ளது. இதனால் மூளையின் பாதிப்பைக் குணப்படுத்தி அதன் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்ய முடியும். இது மாபொருட்களின் மெட்டபோலிசத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

8. போலிக் அமிலம் உள்ள உணவுகள்:
போலிக் அமிலம் இரத்தத்தை உருவாக்குவதுடன், இதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுக்கும். இது மூளையில் செரோட்டின் அளவை குறைப்பதுடன், அல்சைமர் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். இது பச்சை இலை வகைகள், பீன்ஸ், சீரியல் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

9. சிங் உள்ள உணவுகள்:
சிங் எனும் கனியுப்பு மூளைக்கு நரம்புகள் செய்தி அனுப்பும் செயற்பாட்டிலும், அறிவாற்றலிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இது ஆட்டிறைச்சி, பூசனிக்காய் விதை, மாட்டிறைச்சி போன்றவற்றில் அதிகம் உள்ளது.

10. செலினியம் உள்ள உணவுகள்:
செலினியம் எனும் கனியுப்பு சில ஹார்மோன்களின் உருவாக்கத்திற்கும், கலங்களின் தசைகளின் சுவர்களின் உருவாக்கத்திற்கும் உதவும். மூளையில் காணப்படும் டோபமைன் ஒக்ஸிஜன் தாக்கமடையாது செலினியம் பாதுகாக்கிறது. செலினியம் கடல் உணவுப் பொருட்கள், முட்டை, ஈரல் போன்றவற்றில் அதிகம் உள்ளது.