இலங்கை பாராளுமன்றத்தில் பாலியல் தொடர்பான தாக்குதல் அதிர்ச்சி தகவல்

பிரதான செய்திகள்:நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றமே போர்களமாக காட்சி அளித்தது.

மேலும் உறுப்பினர்கள் மீது மிளகாய்பொடி தாக்குதலும் பொலிஸர் மீது அடிதடி தாக்குதல் ஏற்படுத்தியதால் நாடாளுமன்றமே மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹேரின் பெர்னேண்டோ மீது பாலியல் ரீதியான தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

என்னவென்றால் அவரை அடித்து கீழே தாக்கி வேட்டியை உருவி நாடாளுமன்றத்தில் இவ்வாறான பாலியல் தாக்குதல் இடம்பெற்றது வேதனைக்குரியது என கூறியுள்ள மனித உரிமைகள் ஆர்வலர்கள் அவரின் மறைப்புறுப்புக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.