கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நிகழ்வுகள்

மாவீரர் நாள் 2018:மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த மாவீரர் இல்லம் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தில் நாளை நடைபெறவுள்ள மாவீரர் தின நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர், தமிழ் உணர்வாளர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.