மகனின் நினைவு கல்லறை முன் தாயின் மனதை கரைக்கும் அழுகுரல்

மாவீரர் நாள் :தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தம்மையே ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலும், புலம் பெயர் தேசங்களிலும் மிகவும் உணர்வெழுச்சியாக நடைபெற்றுள்ளன.

அந்தவகையில், தென் தமிழீழத்தில் மகனின் கல்லறையில் கதறி அழும் தாய் ஒருவரின் காட்சி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

இதேவேளை, குறித்த தாய் கண்ணீர் மலக்க உணர்வெழுச்சியுடன் உறவுகளை நினைவு கூர்ந்தார். மேலும், துயிலுமில்ல பாடலும் இதன் போது ஒலிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.