Home வவுனியா செய்திகள் வவுனியாவியல் 2 கிலோ கேரள கஞ்சா 5பேரை கைது

வவுனியாவியல் 2 கிலோ கேரள கஞ்சா 5பேரை கைது

வவுனியா செய்திகள்:யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட 2கிலோ கேரள கஞ்சாவுடன் 5பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியாவில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சோமசுந்தரம் பிரதீப் வயது 31, பரந்தன், சோதசுந்தரம் பிரதீபன் வயது 29 பரந்தன், திருவழகன் சதீஸ்குமார் வயது 18 பரந்தன், ரவீந்திரன் சதீஸ் 34வயது நிலாவெளி திருகோணமலை, தேனபந்கே அமரகீர்தி கிஷாந்த வயது 44 ஆகியோரயே இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

ஓமந்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் தகவல் ஒன்றின் அடிப்படையில், ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற சொகுசு காரினை வழிமறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையின் அடிப்படையில் பொதி செய்யப்பட்டு மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 2 கிலோ 50கிராம் கேரள கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.