Home புலனாய்வு செய்தி பிரித்தானியாவின் MI6 அமரிக்காவின் CIA இலங்கை அரசியலில் உதய கம்மன்பில தகவல்

பிரித்தானியாவின் MI6 அமரிக்காவின் CIA இலங்கை அரசியலில் உதய கம்மன்பில தகவல்

புலனாய்வு செய்திகள்:கரு ஜயசூரிய மற்றும் ரணில் விக்ரமசிங்கவுடன் தாம் மோதவில்லை எனவும் அமரிக்காவின் CIA மற்றும் பிரித்தானியாவின் MI6 போன்ற புலனாய்வு துறைகளுடன் மோதினோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என சபாநாயகர் அறிவித்த போது கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வெளிநாடுகளின் தூதுவர்கள் தற்போது சுகமான நித்திரையில் இருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்திடம் இருந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் செய்தமை தாய் நாட்டுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி னவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்