Home விளையாட்டு நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் மழையால் போட்டி ‘டிரா’

நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் மழையால் போட்டி ‘டிரா’

நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்தது.
விளையாட்டு செய்திகள்:இலங்கை முதல் இன்னிங்சில் 282 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன் குவித்தது. தொடக்க வீரர் டாம் லதம் 264 ரன்கள் குவித்தார்.

296 ரன்கள் பின் தங்கிய நிலையில் 4-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்து இருந்தது. குசால் மெண்டிஸ் 116 ரன்னும், மேத்யூஸ் 117 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்றைய 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி ‘டிரா’வில் முடிந்தது.

இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன் எடுத்தது. குசால் மெண்டிஸ் 141 ரன்னும், மேத்யூஸ் 120 ரன்னும் எடுத்தனர்.