Home யாழ் செய்தி யாழ் ஊரெழுவில் குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து மரணம்

யாழ் ஊரெழுவில் குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து மரணம்

யாழ் செய்திகள்:யாழ்.ஊரெழுப் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் புல்லு வெட்டிக் கொண்டிருந்த குடும்பஸ்தரொருவர் திடீரென மயங்கி நிலத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

பருத்தித்துறை வீதி,நல்லூரைச் சேர்ந்த சின்னத்துரை சசிகரன்(46) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, ஊரெழுப் பகுதியிலுள்ள தோட்டக் காணியொன்றில் வேலை செய்வதற்காக சென்ற குறித்த குடும்பஸ்தர் அங்கு புல்லு வெட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயங்கி நிலத்தில் விழுந்த அவரைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஏனையோர் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.