Home இந்திய செய்திகள் நான் அவன் கூட தான் இருப்பேன், என்ன பண்ணுவ? கணவரை மிரட்டிய மனைவி செய்த அதிர்ச்சி...

நான் அவன் கூட தான் இருப்பேன், என்ன பண்ணுவ? கணவரை மிரட்டிய மனைவி செய்த அதிர்ச்சி செயல்

இந்திய செய்திகள்:தமிழகத்தில் கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை வீட்டில் கட்டிப் போட்டு, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (39). இவரது மனைவி சீமா (29). இவருக்கும் அப்பாஸ் (29) என்பவருக்கும், கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

கடந்த, 2ம் திகதி அப்பாஸ், சீமா வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தார்.

அப்போது வீட்டிற்கு வந்த ரவி, அதை பார்த்து அதிர்ச்சியடைந்து இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால் அப்படி தான் அப்பாஸுடன் தான் இருப்பேன் என சீமா கூறினார். இதில் ஏற்பட்ட தகராறில், சீமாவும், அப்பாசும் சேர்ந்து, ரவியை ஒரு அறைக்குள் கட்டி வைத்து, கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் ரவி அங்கிருந்து தப்பி, பொலிசில் புகார் அளித்தார்.

இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்த நிலையில அப்பாஸை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள சீமாவை தேடி வருகிறார்கள்.