Home உள்ளூர் செய்தி புதிய அரசியலமைப்பு சட்டமூலம்! பல்டி அடித்தார் ரணில்! தமிழர்களை ஏமாற்றுகிறாரா?

புதிய அரசியலமைப்பு சட்டமூலம்! பல்டி அடித்தார் ரணில்! தமிழர்களை ஏமாற்றுகிறாரா?

புதிய அரசியல் அமைப்புத் தொடர்பில் தற்போது முன்வைக்கப்பட்டிருப்பது அரசியல் அமைப்புச் சட்ட மூலம் அல்ல. மாறாக புத்திஜீவிகள் மற்றும் பல்வேறு தரப்புக்களின் அபிப்பிராயங்கள் அடங்கிய அறிக்கை மாத்திரமே என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அனைத்துத் தரப்புக்களினதும் கருத்துக்களும் யோசனைகளும் கருத்திற்கொள்ளப்படும். அரசியல் அமைப்புச் சபை பாராளுமன்றத்தில் ஒன்றுகூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

நாட்டைப் பிளவுபடுத்த வேண்டிய தேவையோ பௌத்த தர்மத்திற்கு கிடைக்க வேண்டிய இடத்தை இல்லாமல் செய்ய வேண்டிய தேவையோ அரசாங்கத்திற்கு இல்லை என அவர் குறிப்பிட்டார்.

ஒற்றை ஆட்சியின் கீழ் மாகாண சபைகளின் அதிகாரத்தை பகிர்வதற்கு அரசாங்கம் தயார் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். புதிய அரசியல் அமைப்பை வகுக்கும் நடவடிக்கையில் நாட்டின் அனைத்துத் தரப்புக்களையும் சேர்த்துக் கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.