Home மருத்துவம் சளித் தொல்லை, தடுமலால் குழந்தைகள் அவதிப்படுகிறார்களா?

சளித் தொல்லை, தடுமலால் குழந்தைகள் அவதிப்படுகிறார்களா?

தடுமல் என்பது கேட்பதற்கு அவ்வளவு பெரிய விடயமாக காணப்படாவிடிலும் உண்மையில் அது ஒரு மனிதனையே வாட்டி எடுத்து விடும். பொதுவாக குழந்தைகள் மற்றும் சிறியவர்களுக்கு தடுமல் ஏற்படும் போது அவர்கள் மிகவும் அவதியுறுவார்கள்.

குழந்தைகளுக்கு தடுமல் ஏற்பட்டால் உடனே எல்லோரும் அவர்களை வைத்தியரிடம் அழைத்துச் செல்வர். ஆனால் அவ்வாறு வைத்தியரிடம் அழைத்துச் செல்லத் தேவையில்லை.

வீட்டிலிருந்தவாறே அதனை இலகுவாகப் போக்கலாம். அது எவ்வாறு என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

01. ஓய்வு
குழந்தைகளுக்கு தடுமல் ஏற்பட்டிருப்பின் அவர்களை நன்றாக ஓய்வெடுக்க விடுங்கள். நன்றாக ஓய்வெடுப்பதன் மூலம் தடுமலின் தாக்கம் குறைவடையும்.

02. ஆவி பிடித்தல்
பொதுவாக குழந்தைகள் ஆவி பிடிக்கத் தயங்குவார்கள். இது போன்ற சந்தர்ப்பத்தில், குளியலறையின் கதவுகளை மூடி விட்டு சுடுநீரை நன்றாக ஓட விடுங்கள். இதனால் குளியலறை முழுவதும் ஆவியால் நிரம்பும். பின்னர் உங்கள் குழந்தையை அதனுள் சிறிது நேரம் இருக்க விடுங்கள். இதன் மூலம் தடுமல் குறைவடையும்.

03. வாய் கொப்பளித்தல்
சுடுநீர் சிறிதளவுடன் ஒரு தேக்கரண்டி உப்பை கலந்து கொப்பளிக்கச் செய்யுங்கள். இதன் மூலம் தடுமன் குறைவடைவதோடு தொண்டையில் ஏற்படும் கரகரப்பும் இல்லாமல் போகும்.

04. சுடுநீர்
குழந்தைகளுக்கு தடுமல் ஏற்பட்டுள்ளது எனும் போது அவர்களது உடலில் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று அர்த்தம். எனவே அவர்களுக்கு சுடுநீர் பருகக் கொடுப்பதன் மூலம் அந்த தொற்றுக்களை இல்லாதொழிக்க முடியும்.

05. உறங்கும் நிலை
குழற்தைகள் தடுமலால் அவதியுறும் போது அவர்களை தலையை மேல் நோக்கியவாறு உறங்க விட வேண்டும். இது அவர்களுக்கு நல்ல உறக்கத்தை ஏற்படுத்துவதோடு தடுமல் தொண்டையில் சேர்வதையும் தடுக்கின்றது.

06. மூக்கு சிந்துதல்
நாளொன்றுக்கு குறைந்தது மூன்று அல்லது நான்கு தடவைகள் மூக்கு சிந்துவதன் மூலம் தடுமலில் இருந்து விடுபட முடியும்.

07. எலுமிச்சம் பழச்சாறு
எலுமிச்சம் சாறு ஒரு கோப்பையுடன் தேன் கலந்து குழந்தைகளுக்கு பருகக் கொடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தடுமல் குறையும்.

08. சிக்கன் சுப்
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இந்த முறைமையை கடைபிடிப்பதன் மூலம் தடுமலில் இருந்து விடுபட முடியும். சிக்கன் சுப்பில் அழற்சியை எதிர்க்கும் சத்துக்கள் இருப்பதால் இது தடுமலுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகின்றது.

09. பால் மற்றும் மஞ்சள்
ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர், ஒரு கோப்பைப் பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து குழந்தைகளுக்கு வழங்குங்கள். இந்தக் கலவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து தடுமலை நீக்குகின்றது.