Home பல்சுவை இறக்கும் நிலையில் பூமிக்குரிய சூரியன் படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

இறக்கும் நிலையில் பூமிக்குரிய சூரியன் படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

பல்சுவை தகவல்:இறக்கும் நிலையில் பூமிக்குரிய சூரியன் படிகமாக மாறிவருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

அண்டத்திலுள்ள சூரியன்களுக்கும் ஆயுட்காலம் உண்டு என ஏற்கனவே விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பூமிக்கு சொந்தமான சூரியனும் படிப்படியாக இறப்படைந்து வருவதாகவும், இதனால் திட பளிங்கு நிலைக்கு மாறிவருவதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது “கையா“ செயற்கைக்கோளின் உதவியுடன் இதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த செயற்கைக்கோள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மிகப் பெரிய வெள்ளை குள்ள நட்சத்திரங்கள் தங்கள் முடிவுகாலம் வரும் போது திடமான உலோக படிகங்களாக மாற்றமடைந்து வருவதாக கூறப்படுகின்றது. இதற்கமைய சூரியனும் 10 பில்லியன் ஆண்டுகளில் படிக வெள்ளை குள்ளகிரகமாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.