Home சுவிஸ்லாந்து செய்திகள் சுவிற்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர் பல இலட்சம் பணத்துடன் அந்நாட்டு பொலிஸாரினால் கைது

சுவிற்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர் பல இலட்சம் பணத்துடன் அந்நாட்டு பொலிஸாரினால் கைது

சுவிஸ் செய்திகள்:சுவிற்சர்லாந்திலிருந்து சென்ற இலங்கையை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் பல இலட்சம் பணத்துடன் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றுள்ளதாக சுவிற்சர்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் வர்த்தகத்திற்காக அடிக்கடி சுவிற்சர்லாந்து விமானத்தின் ஊடாக செல்லுவது வழக்கமாகும்.

இந்நிலையில் கடந்த வாரம் சென்ற போது சூரிச் விமான நிலையத்தில் பல இலட்சம் சுவிற்சர்லாந்து பிராங்குகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சுவிற்சர்லாந்தில் வசிப்பவரான அவர் நாட்டிற்கு செலுத்திய வரிக்கும் சோதனையிட்ட போது கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லாமல் இருப்பதால் பணத்தையும் அந்நாட்டு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.