Home உள்ளூர் செய்தி திருகோணமலையில் கேரளா கஞ்சா வைத்திருந்த மூவர் விளக்க மறியல்

திருகோணமலையில் கேரளா கஞ்சா வைத்திருந்த மூவர் விளக்க மறியல்

உள்ளூர் செய்திகள்:திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு பகுதியில் 730 கிராம் கேரளா கஞ்சா வைத்திருந்த மூவரை இம்மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் மற்றும் மூதூர் நீதிமன்ற நீதிவான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

குறித்த உத்தரவு இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய், ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும், சேருநுவர, மூதூர் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 39 வயதுடைய மூவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 180 கிராம் கஞ்சா வைத்திருந்த நிலையில் ஒருவரையும், மூதூர் மற்றும் சேருநுவர பகுதியில் 550 கிராம் கஞ்சா வைத்திருந்த நிலையில் இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து கந்தளாய் மற்றும் மூதூர் நீதிமன்ற நீதிவான்கள் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.