சட்டவிரோமான முறையில் பிரான்ஸ் நோக்கி பயணித்த இலங்கையர்கள் படகு சிக்கலில்

பிரதான செய்திகள்:சட்டவிரோமான முறையில் பிரான்ஸ் நோக்கி பயணித்த இலங்கையர்கள் நாளையதினம் நாடு கடத்தப்படவுள்ளனர்.

மீன்பிடிக்கு பயன்படுத்தும் படகு மூலம் பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்குள் நுழைய முற்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.

இவர்கள் பிரான்ஸ் நாட்டின் விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளனர் என்று கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

பிரான்ஸிற்கு சொந்தமான ரியூனியன் தீவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 70 இலங்கையர்கள் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 70 பேரும் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக திணைக்களத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி சிலாபம் பகுதியிலிருந்து 60 அடி நீளமான படகில் பயணித்த குறித்த 70 பேரும் கடந்த 4 ஆம் திகதி ரீயூனியன் நகரை சென்றடைந்துள்ளனர்.

குறித்த படகில் பயணித்த இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன மேலும் தெரிவித்துள்ளார்.