Home பல்சுவை ஒன்பது கல் மோதிரம்… யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா?

ஒன்பது கல் மோதிரம்… யாருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் தெரியுமா?

பல்சுவை தகவல்:முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம் ஆகிய ஒன்பது கல் கொண்ட நவரத்தின மோதிரங்கள் நம் வாழ்க்கையின் பல்வேறு பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.

வைரம்- வாழ்க்கையில் அபரிதமான பலன்களை தரும், அதாவது எதிர்மறை எண்ணங்களை போக்கி மனதை தெளிவாக்கி, அதிஷ்டத்தை அழைத்து வரும்.
மாணிக்கம்- சமூகத்தில் உயர்ந்த நிலையை பெற்று தர உதவுவதுடன், நம் உடலின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

மரகதம்- அறிவை பிரகாசிக்க செய்து, ஞாபக சத்தியை அதிகரிக்கும், மறதி குணம், மந்த புத்தி, நரம்பு தொடர்பான நோய்களை போக்கும்.

புஷ்பராகம்- கண் பார்வையின் திறன் அதிகரிக்கும், திடீரென அதிர்ஷ்டங்களும் நம்மை தேடி வரும்.
வைடூரியம்- எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும் பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை ஆகிய கோளாறுகள் வராமல் தடுத்து, எதிர்ப்பு சக்திகளை முறியடிக்கும்.

பவளம்- வீரம் அதிகரிப்பதுடன், கட்டு மஸ்தான, கம்பீரமாக உடலின் அமைப்பை பெறலாம்.
முத்து- உடல் குளிர்ச்சி அடையும், மனம் தெளிவாகும்.

நீலக்கல்- ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் நீங்கும்.

கோமேதகம்- உடலின் வெப்பம் சீராக வைத்துக் கொள்ள உதவும்.
இத்தகைய ஒன்பது நவரத்தினக் கல்லினை கொண்ட ஒவ்வொரு ரத்தினத்திலும் ஒவ்வொரு பலன்கள் இருந்தாலும், இந்த நவரத்தின மோதிரத்தை அனைவரும் அணிந்துக் கொள்ள முடியாது.